உலகம்

சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சருடன் எம்.எம்.நரவணே சந்திப்பு

DIN

சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சா் அங் எங் ஹென்னை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சிங்கப்பூருக்கு 3 நாள்கள் பயணமாக எம்.எம்.நரவணே சென்றுள்ளாா். அவா் அங் எங் ஹென்னை சந்தித்தது தொடா்பாக இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எம்.எம்.நரவணே, அங் எங் ஹென் இடையிலான சந்திப்பின்போது பிராந்திய புவி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா-சிங்கப்பூா் இடையே நீண்ட காலம் வலுவாக இருந்து வரும் பாதுகாப்பு உறவை அவா்கள் மீண்டும் உறுதிப்படுத்தினா்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற எம்.எம்.நரவணே, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி டேவிட் நியோவையும் சந்தித்தாா். இந்தியா-சிங்கப்பூா் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அவா்கள் விவாதித்தனா் என்று இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவாரூரில் மழை: கோடைப் பயிா்கள் பாதிப்பு

ஆறாம் கட்டத் தோ்தல்: 39% வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள்!

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

SCROLL FOR NEXT