உலகம்

உக்ரைன்: சுமி பகுதியிலும் உடல்கள் கண்டெடுப்பு; சித்ரவதைக்கான அடையாளங்கள் இருப்பதாகத் தகவல்

DIN

உக்ரைனின் சுமி பகுதியில் சித்ரவதை செய்யப்பட்ட தடயங்களுடன் மேலும் சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அந்த நகர ஆளுநர் டிமிட்ரோ சைவட்ஸ்கி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக  தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் ரஷியப் படையினர் உக்ரைன் மக்களையும் தாக்குவதாக உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டி வருகிறார். 

தலைநகர் கீவ் அருகே புச்சா என்ற பகுதியில் நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட  உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரஷியப் படையினர் செய்தது இனப்படுகொலை என்றும் உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சுமி பகுதியில் சில உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றில் குறைந்தது 3 உடல்களில் சித்ரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுமி பகுதி ஆளுநர் டிமிட்ரோ சைவட்ஸ்கி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3 ஆம் தேதி ரஷியப் படைகள் சுமி பகுதியில் இருந்து வெளியேறிய பின்னர் இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT