ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியமைத்ததிலிருந்து தீவிரவாதத் தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. எனினும் ஆங்காங்கே செயல்பட்டு வரும் அரசுக்கு எதிரான குழுக்கள் அவ்வப்போது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதையும் படிக்க | ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்?
இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூலின் புல்-இ-கிஸ்தி மசூதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த கையெறி குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.