முகப்பு
உலகம்

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் இலங்கையிலிருந்து வெளியேறத் தடை

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகிய அஜித் நிவார்த் கப்ரால், ஏப்ரல் 18ஆம் தேதி வரை நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்படுவதாக கொழும்பு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்
பகிர்:

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகிய அஜித் நிவார்த் கப்ரால், ஏப்ரல் 18ஆம் தேதி வரை நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்படுவதாக கொழும்பு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை கடந்த திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

இது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட சுட்டுரையில் கூறியதாவது:

“அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ள சூழலில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இவரது எதிா்ப்பையும் மீறி உதவி கோரி சா்வதேச நிதியத்தை இலங்கை அரசு கடந்த இரு வாரங்களுக்கு முன் அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கூடுதல் நீதிபதி அமர்வு, ஏப்ரல் 18ஆம் தேதி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →