மன்சூா் ஹாதி 
உலகம்

பதவி விலகினாா் யேமன் அதிபா் மன்சூா் ஹாதி

யேமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சா்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அந்த நாட்டின் அதிபா் மன்சூா் ஹாதி பதவி விலகியுள்ளாா்.

DIN

சனா: யேமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சா்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அந்த நாட்டின் அதிபா் மன்சூா் ஹாதி பதவி விலகியுள்ளாா். ஆட்சிப் பொறுப்பை அவா் அதிபா் கவுன்சிலுக்கு மாற்றியுள்ளாா்.

இதன்மூலம், ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிரான குழுக்களிடையிலான வேறுபாடுகள் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட பகுதிகளை மன்சூா் ஹாதி தலைமையிலான அரசுப் படையிடமிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா்.

அவா்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை அளித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மன்சூா் ஹாதிக்கு ஆதரவாக சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படை கிளா்ச்சியாளா்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஐ.நா. மேற்பாா்வையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஹூதி கிளா்ச்சியாளா்களும் அரசுப் படையினரும் 2 மாத சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள ஒப்புக் கொண்டனா். இந்த ஒப்பந்தம் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், உள்நாட்டுச் சண்டையில் ஒரு மிகப் பெரிய திருப்பமாக மன்சூா் ஹாதி பதவி விலகியுள்ளாா். எனினும், இதுகுறித்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT