உலகம்

அமைச்சரவைக் கூட்டத்துக்கு இம்ரான் கான் அவசர அழைப்பு

DIN


பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) இரவு அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிரதமர் இம்ரான் கான் அவசரமாக அழைப்பு விடுத்துள்ளார். 

இம்ரான் கான் தலைமையில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஸர்தாரி பேசுகையில், "நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லையென்றால் அது அரசியலமைப்பை மீறும் செயல். மார்ச் 7-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தால், அது அப்போதே எழுந்திருக்க வேண்டும்.

பெரும்பான்மையை இழந்த பிறகே இம்ரான் கான் சதித் திட்டம் என்ற யோசனையுடன் வந்திருக்கிறார். அவர் தற்போதும் அவையில் இல்லை. அவரே அவரை தற்காத்துக்கொள்ள முடியாது" என்றார்.

இதனிடையே, இம்ரானுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்ற துணைத் தலைவர் மறுத்தது செல்லாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆளும் பிடிஐ கட்சி மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT