ரஷிய பொருள்கள் அனைத்துக்கும் தடை: உக்ரைன்
ரஷியாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருள்களுக்கும் தடை விதித்துள்ள உக்ரைன் அரசு
மெல்போர்ன்: ரஷியாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருள்களுக்கும் தடை விதித்துள்ள உக்ரைன் அரசு, மற்ற நாடுகளும் ரஷியாவில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. போருக்கு முன்பு ஆண்டுக்கு சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்தது உக்ரைன்.
இதுதொடர்பாக உக்ரைன் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ சனிக்கிழமை தனது முகநூல் பக்க பதிவில் வெளியிட்டிருப்பதாவது:
"ரஷியாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருள்களுக்கும் முழுமையாக தடை விதித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது" எ
"இனிமேல், ரஷிய கூட்டமைப்பின் எந்தவொரு தயாரிப்புகளையும் எங்கள் நாட்டின் எல்லைக்குள் இறக்குமதி செய்ய முடியாது."
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷியப் படைகள் தாக்குதல் தொடங்கியதில் இருந்து, இரு நாடுகளுக்கு இடையே பொருள்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை, இந்த நிலையில் ரஷியாவில் இருந்து பொருள்கள் இறக்குமதியை நிறுத்துவதற்கான தடையை சனிக்கிழமை சட்டமாக்கியது உக்ரைன்.
"உக்ரைனின் இத்தகைய நடவடிக்கை மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும், மேலும் ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்துவதற்கு அவர்களைத் தூண்டும், எரிசக்தி தடையை அமல்படுத்துதல் மற்றும் அனைத்து ரஷிய வங்கிகளையும் தனிமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும்."
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி ரஷியாவின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை புறக்கணிக்கவும் மற்றும் அதன் ராணுவ தாக்குதலால் ரஷியாவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு மேற்கத்திய நாடுகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷியா மீது பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஏற்கெனவே அவா்கள் மீது அமெரிக்கா இத்தகைய தடையை விதித்து தனிமைப்படுத்தியுள்ளன, மேலும் சனிக்கிழமை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் தடைகள் அறிவிக்க உள்ளதாக கூறினார்.
உக்ரைன் போா் எதிரொலியாக சா்வதேச சந்தையில் தானியம், தாவர எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களின் விலைகள் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | 10 வழித்தடங்களுக்கு ரஷியா ஒப்புதல்