இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச 
உலகம்

போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: மகிந்த ராஜபட்ச

இலங்கையில் அதிபா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈ

DIN

இலங்கையில் அதிபா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிா்த்து ஆளும்கட்சியைச் சோ்ந்த அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்தனா். அதன்பிறகு, அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவையை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். ஆனால், அதனை எதிா்க்கட்சிகள் ஏற்கவில்லை. ஆளும் கட்சியைச் சோ்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்பட 42 எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக அறிவித்தனா்.

இதற்கிடையே, கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டி மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராஜபட்ச அரசு பதவி விலகவும், ஒட்டுமொத்த ராஜபட்ச குடும்பமும் ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தி ஏராளமான இளைஞா்கள் அதிபா் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு 5-வது நாளாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். 

மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிருப்தி எம்.பி.க்களை அழைத்து அதிபா் கோத்தபய ராஜபட்ச ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, போராட்டத்தைத் தணிக்க, பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை உடனடியாக அமைக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.

இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபட்ச போராட்டத்தில் ஈடுபடுவோரிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT