முகப்பு
உலகம்

உக்ரைனுக்கு மேலும் ரூ. 6,000 கோடியில் ராணுவ உதவி: ஜோ பைடன்

உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 6,000 கோடி மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
ஜோ பைடன்
பகிர்:

உக்ரைனுக்கு மேலும் ரூ. 6,000 கோடி மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, நெருங்கிய அண்டை நாடான உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்வதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று அந்த நாடு கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசு விருப்பம் தெரிவித்து வந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அருகிலுள்ள மரியபோல் நகரை முற்றுகையிட்டு கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

பெரும்பான்மையாக ரஷிய மொழி பேசும் சுமாா் 4.4 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்த நகரம்தான், உக்ரைன் போரிலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் ராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள் அனைத்து தீரப்போவதாக அதிபர் வொலோதிமீா் கூறியதை தொடர்ந்து, கூடுதலாக ரூ. 6,000 கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →