வாட்ஸ்-ஆப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்; அடடா இதுவும் இருக்கிறதே! 
உலகம்

வாட்ஸ்-ஆப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்; அடடா இதுவும் இருக்கிறதே!

சமூக வலைத்தளங்களிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-ஆப்பில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகம் சய்து கொண்டேதான் இருக்கிறது மெட்டா நிறுவனம்.

DIN


பெற்றவர்கள் பிள்ளைகளைக் கவனிக்கிறார்களோ இல்லையோ, படிக்கும் பிள்ளைகள் பாடங்களை கவனிக்கிறார்களோ இல்லையோ வாட்ஸ்-ஆப்பை கவனிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அனைத்து செல்லிடப்பேசிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது வாட்ஸ்-ஆப்.

சமூக வலைத்தளங்களிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-ஆப்பில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகம் சய்து கொண்டேதான் இருக்கிறது மெட்டா நிறுவனம்.

அந்த வகையில் தற்போது புதிய அம்சங்கள் அதில் இணையவிருக்கின்றன.

அதாவது, முகநூல், இஸ்டாகிராம் போன்றவற்றில் இருப்பது போல, சாட் பாக்ஸில், பயனாளர்கள் தங்களது ரியாக்ஷனை வெளிப்படுத்தும் எமோஜிகளை அனுப்பும் புதிய வசதி அறிமுகமாகிறது.

வாட்ஸ்-ஆப்பில் விரைவில் பயனாளர்கள் எமோஜிகளை, தோலின் நிறத்தை தேர்வு செய்து அனுப்பும் வகையில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, வாட்ஸ்-ஆப்பில் அனுப்பும் கோப்புகளின் அளவை அதிகரிக்கவும் முன் வந்துள்ளது. தற்போது வெறும் 100 எம்.பி. அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும். இது இனி 2 ஜிகா பைட்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

ஒரே நேரத்தில் 32 பேருடன் வாய்ஸ் காலிங் செய்யும் வசதியும் வருகிறது. தற்போது வாய்ஸ் காலிங்கில் வெறும் 8 பேரை மட்டுமே சேர்க்க முடியும்.

ஒரு குழுவில் ஏதேனும் ஒரு பயனாளர், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தகவலை அனுப்பினால் அதனை குரூப் அட்மினே டெலீட் செய்யும் வசதி விரைவில் வரவிருக்கிறது. இதனால் குரூப் அட்மின்களுக்கு தொல்லை தீர்ந்தது.

ஒரு பயனாளரின் பெயரை நமது கான்டாக்ட் பட்டியலில் சேர்க்காமலேயே, அவருக்கு வாட்ஸ்-ஆப்பில் தகவல் அனுப்பும் வசதியும் வருகிறது.

இவையெல்லாம் வரும் வாரத்தில் அப்டேட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT