உலகம்

உக்ரைன் போரால் ரஷியாவில் உள்நாட்டு உற்பத்தி குறையும்: ஐஎம்எஃப்

DIN


உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியாவில் இந்தாண்டு உள்நாட்டு உற்பத்தி சதவீதம் குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தாக்குதல் 2 மாதத்தை நெருங்க உள்ளது. போரின் விளைவாக உக்ரைனில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போரைத் தொடர்ந்த ரஷியாவில் இந்தாண்டு (2022) உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதம் வரை குறைய உள்ளதாக  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பியரி ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமும் போரின் எதிரொலியாக சரிவைச் சந்தித்து வருகின்றன. உலக அளவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களில் விலை அதிகரித்து வருவதற்கும் உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலே காரணம் என்றும்  போர் எதிரொலி காரணமாக உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT