உலகம்

போர் விடியோக்களை நீக்காததால் கூகுளுக்கு அபராதம் விதித்தது ரஷியா

DIN

உக்ரைனில் நடக்கும் போரின் விடியோக்களை யூடியூப்பிலிருந்து நீக்காததால் கூகுளுக்கு ரஷியா அபராதம் விதித்துள்ளது.

உக்ரைனில் ரஷிய ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 2 மாதங்களை நெருங்க இருக்கும் இந்தப் போரில் ரஷியாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். 

ரஷிய வீரர்களின் தாக்குதலுக்கு உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும், ரஷியப் படைகளின் தாக்குதலால் உக்ரைன் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் ரஷியாவின் தாக்குதல்கள் அதிக உயிரழப்புகளையும் சேதங்களையும் சந்தித்துள்ளது.

மேலும், இன்று மரியுபோல் நகரத்தை முற்றிலும் கைப்பற்றியதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைனில் நடக்கும் போர் பற்றிய தாக்குதல் காட்சிகளை யூடியூப் நீக்காமல் இருந்ததற்காக கூகுளுக்கு மாஸ்கோ நீதிமன்றம் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT