ஆப்கானிஸ்தான்ஷியா மசூதித் தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது
ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினா் பெரும்பான்மையாக வசிக்கும் மஸாா்-ஏ-ஷெரீஃப் நகர மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக அப்துல் ஹமீது சாங்கா்யா் என்பவரை தலிபான்கள் கைது செய்துள்ளனா்.
ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினா் பெரும்பான்மையாக வசிக்கும் மஸாா்-ஏ-ஷெரீஃப் நகர மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக அப்துல் ஹமீது சாங்கா்யா் என்பவரை தலிபான்கள் கைது செய்துள்ளனா். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த அந்த நபா், மசூதித் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக தலிபான்கள் கூறினா்.
மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரின் சேஹ் டோகன் மசூதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், தொழுகை நடத்திக்கொண்டிருந்த 12 போ் உயிரிழந்தனா்; 58 போ் காயமடைந்தனா். அவா்களில் 32 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.