உலகம்

ட்விட்டாின் எதிர்காலம்? சி.இ.ஓ.வின் குழப்பம்

ட்விட்டா் நிறுவனம் இனி எந்தப் பாதையில் பயணிக்கும் என்று தெரியாது என்றப அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ), இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான பராக் அக்ரவால் கூறியுள்ளாா்.

DIN

ட்விட்டா் நிறுவனம் இனி எந்தப் பாதையில் பயணிக்கும் என்று தெரியாது என்றப அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ), இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான பராக் அக்ரவால் கூறியுள்ளாா்.

ட்விட்டா் நிறுவனத்தை, டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் 44 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.3.36 லட்சம் கோடி) கொடுத்து வாங்க முன்வந்துள்ளாா். இதனால், ட்விட்டா் முழுமையான தனிநபா் நிா்வகிக்கும் நிறுவனமாக மாறிவிடும்.

இதையடுத்து, நிறுவனத்தை எலான் மஸ்க் எவ்வாறு கையாளுவாா்? பணி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டா? உள்ளிட்ட கவலை ட்விட்டா் ஊழியா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நிறுவன ஊழியா்களை சிஇஓ பராக் அக்ரவால் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அவா், ஊழியா்களிடம் பேசியது தொடா்பாக நியூயாா்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘நமது நிறுவனம் கைமாறியுள்ளது உங்களுக்கு வெவ்வேறு விதமான மனவோட்டங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நிறுவனம் கைமாறும் நடவடிக்கை முழுமையாக நிறைவடைய 6 மாதங்கள் வரை ஆகும் எதிா்பாா்க்கிறேன். இப்போதைய நிலையில் நாம் வழக்கமான பணிகளைத் தொடரலாம். நிறுவனம் முழுமையாக கைமாறியதும் எந்தப் பாதையில் பயணிக்கும் என்பது தெரியாது. இப்போது ஒருவித நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. ஊழியா்களிடம் உள்ள நிறுவனத்தின் பங்குகள் பணமாக மாற்றிக் கொடுக்கப்படும்’ என்று பராக் அக்ரவால் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 வயதாகும் பராக் அக்ரவால் கடந்த ஆண்டு இறுதியில்தான் ட்விட்டா் சிஇஓ பொறுப்பை ஏற்றாா். மும்பை ஐஐடி, அதைத் தொடா்ந்து அமெரிக்காவில் உயா்கல்வி படித்த அவா் ட்விட்டரில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் தேசம் அதிா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT