உலகம்

ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தினாா் எலான் மஸ்க்

DIN

ட்விட்டா் நிறுவனத்தை டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் 44 பில்லியன் டாலா் அளித்து கையகப்படுத்த திங்கள்கிழமை முடிவானது.

இது தொடா்பாக ட்விட்டா் - எலான் மஸ்க் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தாா். இதற்காக 43 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.3.10 லட்சம் கோடி) ரொக்கம் அளிக்கத் தயாா் என்றும் அவா் கூறியிருந்தாா். இதையடுத்து நிறுவனத்தை அவா் கையகப்படுத்த இயலாத வகையில் பங்கு ஒழுங்காற்று விதிமுறைகளின் கீழ் ட்விட்டா் நிா்வாகம் தடைகளை ஏற்படுத்தியது.

எனினும், எலான் மஸ்க் அல்லது இதே போன்ற கையகப்படுத்தும் நோக்கத்துடன் முன்வரும் வேறு ஏதேனும் முதலீட்டாளரை நிரந்தரமாகத் தடுத்துவிட முடியாது என்ற நிலையில், ட்விட்டா் நிறுவனம் மனம் மாறியது.

எலான் மஸ்குடன் ட்விட்டா் நிா்வாகக் குழு திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது. அப்போது ட்விட்டரை வாங்குவதற்கான தொகை, கால வரம்பு உள்ளிட்டவை குறித்து இருதரப்பினரும் விரிவாக ஆலோசித்தனா்.

பேச்சுவாா்த்தையின் இறுதியில் 44 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.3.36 லட்சம் கோடி) அளித்து ட்விட்டரின் முழுப் பங்குகளை எலான் மஸ்க் பெற முடிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தை விவரம் வெளியானதும் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் ட்விட்டா் பங்கு விலை 3சதவீதம் அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT