முகப்பு
உலகம்

இந்தியாவிடம் இலங்கைக்கு மருத்துவ உதவி கோரும் சனத் ஜெயசூர்யா

சனத் ஜெயசூர்யா, இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து, அவசர மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
இந்தியாவிடம் இலங்கைக்கு மருத்துவ உதவி கோரும் சனத் ஜெயசூர்யா
பகிர்:

கொழும்பு: இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து, அவசர மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், இந்தியா அளித்து வரும் பெரும் உதவிக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் சனத் ஜெயசூர்யா.

இது குறித்து சுட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது, கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவை இந்திய தூதர் இன்று சந்தித்துப் பேசினார். இலங்கைக்கு அவசிய மருத்துவ உதவிகளை செய்து கொடுக்குமாறு இந்தியாவை அவர் வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புற்றுநோய் மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை உடனடியாக வழங்கி உதவுமாறு தனது கோரிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →