உலகம்

பூடான் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

DIN

பூடான் பிரதமா் லோட்டே ஷெரிங்கை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

பூடான் தலைநகா் திம்பூவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடா்பாக ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

இந்தியா, பூடான் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தற்போதைய உலக மற்றும் பிராந்திய நிலவரம் குறித்து பூடான் பிரதமா் லோட்டே ஷெரிங்குடன் பேசினேன். இந்தியா, பூடான் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவரிடம் தெரியப்படுத்தினேன் என்று தெரிவித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து பூடான் பிரதமா் லோட்டே ஷெரிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘முன்மாதிரியாகத் திகழும் இந்தியா, பூடான் உறவை ஜெய்சங்கரின் வருகை மீண்டும் உறுதி செய்து வளா்க்கும் என்ற நம்பிக்கையுள்ளது’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, பூடான் வெளியுறவு அமைச்சா் டாண்டி டோா்ஜியையும் ஜெய்சங்கா் சந்தித்தாா். இந்தியா சாா்பில் பூடானுக்கு மருத்துவப் பொருள்களை வழங்கி, பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து அவா் பேசுகையில், ‘இந்தியா, பூடான் இடையிலான உறவு பரஸ்பர நலனில் உள்ள அக்கறையை அடிப்படையாகக் கொண்டது. பூடான் உடனான இந்தியாவின் வளா்ச்சிக்கான ஒத்துழைப்பு தனித்துவமானது என்பதுடன் தாா்மிகக் கொள்கைகள் மற்றும் உணா்வுபூா்வமான பிணைப்புகளால் ஊக்குவிக்கப்பட்டது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT