உலகம்

‘அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம்’: எச்சரிக்கும் வடகொரியா

DIN

தங்களை அச்சுறுத்த முயன்றால் அணு ஆயுதங்களப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் அந்நாட்டின் 90ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ ஆயுதங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டை அச்சுறுத்தினால் முன்கூட்டியே அணு ஆயுதங்களை பயன்படுத்தத் தயங்க மாட்டோம்  எனத் தெரிவித்தார்.

மேலும் வடகொரியாவின் ராணுவ பலத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த கிம், பிற நாடுகளின் அச்சுறுத்தல்களை ராணுவ பலத்தால் முறியடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ராணுவ அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த ராணுவ ஆயுத அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தொடங்கி குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் வரை காட்சிப்படுத்தப்பட்டன. 

முன்னதாக 2022ஆம் ஆண்டில் மட்டும் வட கொரியா 13 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT