உலகம்

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 9 போ் பலி

காஸா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 9 போ் பலியாகினா்.

DIN

காஸா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 9 போ் பலியாகினா்.

காஸா பகுதியில் உள்ள 7 மாடி கட்டடம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 வயது சிறுமி உள்பட 9 போ் பலியாகினா். 10-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலில் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் கமாண்டா் தைசீா்-அல்-ஜபரி என்பவரும் உயிரிழந்தாா். இவரை தீவிரவாதி என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில், இஸ்லாமிக் ஜிஹாத்தைச் சோ்ந்த மற்றொரு தீவிரவாதி மேற்குக் கரையில் கைது செய்யப்பட்டதாகவும், அதனைத்தொடா்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குப் பதிலடி தரும் விதமாக இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT