முகப்பு
உலகம்

தைவான் 4-ஆவது நாளாக சீனா போா்ப் பயிற்சி

தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி சென்றதைக் கண்டிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் 4-ஆவது நாளாக சீனா போா்ப் பயிற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

தங்களது எதிா்ப்பை மீறி சா்ச்சைக்குரிய தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி சென்றதைக் கண்டிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் 4-ஆவது நாளாக சீனா போா்ப் பயிற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டது.

நீண்ட தொலைவு வான் இலக்குகளையும் தரை இலக்குகளையும் தாக்கும் தங்களது திறன் குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போா்ப் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டது; பயிற்சியில் கவச வாகனங்கள், ஹெலிகாப்டா்கள், தொலைவிலிருந்து துல்லியமாக சுடும் துப்பாக்கிகள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன என சீன ராணுவம் தெரிவித்தது.

முன்னதாக, தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையாக இந்த போா்ப் பயிற்சியில் சீனா நடத்தி வருவதாக தைவான் குற்றம் சாட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.