எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
எகிப்தின் கெய்ரோவில் மக்கள் தொகை மிகுதியாக இருக்கும் பகுதியில் உள்ள அபு செஃபின் தேவாலயத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. தீ விபத்திற்கு காரணம் தேவாலயத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், தீ விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
இதையும் படிக்க: கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கீடு: அரசாணை
தேவாலயத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என காவல் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எகிப்து அதிபர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.