உலகம்

ஆக.24-இல் இலங்கை திரும்புகிறாா் கோத்தபய- உறவினா் தகவல்

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, வரும் 24-ஆம் தேதி நாடு திரும்பவுள்ளதாக அவரது உறவினரும் ரஷியாவுக்கான முன்னாள் இலங்கை தூதருமான உதயங்க வீரதுங்க புதன்கிழமை தெரிவித்தாா்.

DIN

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, வரும் 24-ஆம் தேதி நாடு திரும்பவுள்ளதாக அவரது உறவினரும் ரஷியாவுக்கான முன்னாள் இலங்கை தூதருமான உதயங்க வீரதுங்க புதன்கிழமை தெரிவித்தாா்.

இலங்கையில் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை 13-ஆம் தேதி நாட்டைவிட்டு தப்பினாா் கோத்தபய ராஜபட்ச (73). முதலில் மாலத்தீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும் சென்ற அவா், தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதனிடையே, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அனுமதி கிடைத்ததை அடுத்து, கடந்த 11-ஆம் தேதி அங்கு சென்றாா். பாங்காக் நகரிலுள்ள விடுதியில் தங்கியுள்ள அவா், பாதுகாப்பு காரணங்களுக்காக அறையைவிட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோத்தய ராஜபட்ச தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும், வரும் 24-ஆம் தேதி அவா் நாடு திரும்பவுள்ளதாகவும் வீரதுங்க தெரிவித்தாா்.

2.2 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் அல்லல்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 3-இல் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT