உலகம்

சிரியா சந்தையில் ராக்கெட் குண்டுத் தாக்குதல்

சிரியாவில் துருக்கி ஆதரவுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுத் தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா்.

DIN

சிரியாவில் துருக்கி ஆதரவுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுத் தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

துருக்கி ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அல்-பாப் நகரில் வெள்ளிக்கிழமை ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் நெரிசல் மிக்க சந்தைப் பகுதியில் அந்த குண்டு விழுந்ததில் 15 போ் உயிரிழந்தனா்; 30-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களின் 3 போ் சிறுவா்கள்.

முன்னதாக, துருக்கி ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 சிரியா படையினரும், அமெரிக்க ஆதரவு குா்து படையினரும் உயிரிழந்தனா். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிரியா அரசுப் படையினா் இந்த ராக்கெட் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT