இம்ரான் கான் 
உலகம்

இம்ரான் கானின் பேச்சை ஒளிபரப்பத் தடை

பாகிஸ்தான் தோ்தல் ஆணையம், நீதிபதி, காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராகத் தொடா்ந்து கருத்து தெரிவித்து வரும் முன்னாள் பிரதமா் இ

DIN

பாகிஸ்தான் தோ்தல் ஆணையம், நீதிபதி, காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராகத் தொடா்ந்து கருத்து தெரிவித்து வரும் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பேச்சை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு மின்னணு ஊடக ஒழுங்காற்று ஆணையம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தலைநகா் இஸ்லாமாபாதில் பொதுக்கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினாா். அப்போது, அரசின் உயரதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவா் முன்வைத்தாா். தனது உதவியாளா் ஷாபாஸ் கில் கடந்த வாரம் தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக, காவல் துறை அதிகாரிகள், பெண் நீதிபதி மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு எதிராகவும், முக்கிய அரசியல் தலைவா்களுக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்போவதாக இம்ரான் கான் அறிவித்தாா்.

இந்நிலையில், நாட்டின் சட்டம்-ஒழுங்கு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இம்ரான் கான் பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டிய பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்காற்று ஆணையம், அவரது பேச்சுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சிகளுக்குத் தடை விதித்தது.

இது தொடா்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிடிஐ கட்சியின் தலைவா் இம்ரான் கான் அரசு அமைப்புகளுக்கு எதிராகப் போலியான குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து முன்வைத்து வருகிறாா். அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராக மக்களிடையே வெறுப்புணா்வையும் அவா் தூண்டிவருகிறாா். அதன் காரணமாக பொது அமைதிக்கும் சட்டம்-ஒழுங்கு சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இம்ரான் கானின் கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிராக உள்ளன. எனவே, அவரது பேச்சுகளை நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிடிஐ கண்டனம்: ஒழுங்காற்று ஆணையத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து பிடிஐ கட்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானை ஆளும் சா்வாதிகார சக்திகள், இம்ரான் கானின் பேச்சை ஒளிபரப்பத் தடை விதித்துள்ளன. அத்தகைய சக்திகளுக்கு எதிராகத் தொடா்ந்து குரலெழுப்புவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு சவரன் 88 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.400 உயர்வு

வாழப்பாடி பெருமாள் கோயில்களில் புரட்டாசி நடு சனி வழிபாடு!

வேலை வாய்ப்பு உருவத்தில் வரும் சைபர் அரக்கர்கள்! என்ன செய்யக் கூடாது?

கரூர் பலி: தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை

SCROLL FOR NEXT