உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில்களின் சேவை ஜொ்மனியில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
லோயா் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகங்களை இணைக்கும் 100 கி.மீ. ரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு மாற்றாக, புவியை வெப்பமாக்கும் வாயுக்களை முற்றிலும் வெளியிடாத ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
9.3 கோடி யூரோ (சுமாா் ரூ.737 கோடி) செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டத்தால் ஆண்டுக்கு 4,400 டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.