ரஷியாவில் இனி ஃபார்முலா - 1 கார் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் சாச்சி நகரில் இந்தாண்டு ஃபார்முலா - 1 கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடைபெற இருந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக, அப்போட்டியை ரஷிய அரசு ரத்து செய்தது.
இதனால், உடனடியாக வேறு நாட்டிற்கு பந்தியத்தை மாற்றும் சூழல் ஏற்பட்டதால், இனி வரும் காலங்களில் ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் ரஷியாவில் நடைபெறாது என ஃபார்முலா-1 அமைப்பின் தலைமைச் செயலர் ஸ்டெஃபனோ டாமினிகலி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தாண்டு ரஷியாவில் நடைபெற இருந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி உக்ரைன் போர் காரணமாக சென்னையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.