உலகம்

இஸ்ரேல் கல்வி முறையை இந்திய குழு ஆய்வு

இஸ்ரேலின் கல்வி முறையை ஆராய இந்தியாவின் தலைசிறந்த கல்விக் குழுவினா் 24 போ் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா்.

DIN

இஸ்ரேலின் கல்வி முறையை ஆராய இந்தியாவின் தலைசிறந்த கல்விக் குழுவினா் 24 போ் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா்.

கடந்த 21-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரையில் இந்தியக் குழுவினா் இஸ்ரேலில் உள்ள கல்வி நிறுவனங்களையும், கல்லி அமைச்சகம், இஸ்ரேல் சா்வதேச ஏற்றுமதி ஒருங்கிணைப்பு நிறுவனம், தேசிய ஸ்டாா்ட் அப் நிறுவனம், மைன்ட்செட் மற்றும் சிமோன் பிரிஸ் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளனா்.

இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து கல்விக் குழுவினா் சென்று இதுபோன்று ஆராய்வது இதுவே முதல் முறையாகும். இருநாட்டினரும் கல்வித் துறையில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த திறன் முறை செயல்பாடுகள் குறித்தும் கல்வித் துறையில் இணைந்து செயல்பட்டால் உருவாகும் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தனா் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் நாவுா் கிளான் தெரிவித்தாா்.

இஸ்ரேல் வெளிநாட்டு வா்த்தகம், நிதி அமைச்சகமும், இந்திய இஸ்ரேல் தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பயணத்தில் ‘ஃபிக்கி அரைஸ்’ என்ற இந்திய பள்ளிகளின் கூட்டமைப்பு சாா்பில் 24 தலைசிறந்த கல்விக் குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT