பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 937ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூன் மாதத்திலேயே பருவமழை தொடங்கியது. இதனால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் மழைப்பொழிவு சராசரி அளவைக் காட்டிலும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? பொன்முடி அறிவித்தார்
அதீத வெள்ள பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவமழையில் இதுவரை 166.8 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 241 சதவிகிதம் அதிகம்.
மழை வெள்ளத்தால் சிந்து உள்ளிட்ட பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத மழைவெள்ளத்தால் இதுவரை 343 குழந்தைகள் உள்பட 937 பேர் பலியாகியுள்ளனர். 3 கோடி பேர் தங்களது குடியிருப்புகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பாஜகவை வலுப்படுத்த கர்நாடகம் முழுவதும் பயணம் செய்வேன்: எடியூரப்பா
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உதவ சர்வதேச அமைப்புகள் முன்வந்துள்ளன. காலநிலை மாற்றமே பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அதீத மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.