உலகம்

ஆப்கானிஸ்தான்: பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க தலிபான் தடை!

DIN

ஆப்கானிஸ்தான் பெண்கள் கல்வி கற்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது. 

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

சமீபத்தில் ஆப்கன் தொலைக்காட்சியில் தோன்றும் பெண்கள் அனைவரும் கண்களைத் தவிர முகத்தின் மற்ற பகுதிகளை மறைக்கும் ‘நக்காபை’ அணிய வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவு சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடப்பட்டது. 

இந்நிலையில், தற்போது கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு மாணவிகள் செல்லக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT