உலகம்

நண்பர் நரேந்திர மோடியை ஆதரிக்க ஆவலாக உள்ளேன்: ஜோ பைடன்

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவையும், தனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

DIN

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவையும், தனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா அதிகாரபூர்வமாக நேற்று ( டிசம்பர் 1) முதல் ஏற்றுக் கொண்டது. 

அதனை வெளிப்படுத்தும் விதமாக நாட்டில் பல்வேறு முக்கிய நினைவுச் சின்னங்கள் வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, உலகம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் இந்த தருணத்தில் ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது அந்த பிரச்னைகளுக்கு தீர்வளிக்க இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவையும், தனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா அமெரிக்காவின் வலிமையான நட்பு நாடு. இந்தியா ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் இந்த தருணத்தில் நான் என்னுடைய நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிக்க காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட் பதிவுகள் குறித்து பேசிய அதிபர் பைடன் கூறியதாவது: அமெரிக்கா மற்றும் இந்தியா இரு நாடுகளும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. இந்த பயணத்தில் பருவநிலை மாற்றம், ஆற்றல் மற்றும் உணவு நெருக்கடி போன்ற சவால்கள் உள்ளன. இந்த சவால்களை ஒன்றாக பயணித்து வெல்லத் தயாராக உள்ளோம் என்றார்.

முன்னதாக, ஜி20 மாநாடு என்பது அந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கான நலனை மட்டும் சார்ந்தது கிடையாது. உலகின் தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளின் வளர்ச்சிக்குமானதுதான். தெற்கு நாடுகளின் குரல்கள் கேட்கப்படாமல் இருந்த நிலை தொடர வேண்டாம். அவர்களின் நலன் சார்ந்ததும்தான் இந்த ஜி20 மாநாடு எனப் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நவ. 3-இல் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

SCROLL FOR NEXT