யாழ்ப்பாணம் - சென்னை இடையே மீண்டும் விமான சேவை 
உலகம்

யாழ்ப்பாணம் - சென்னை இடையே மீண்டும் விமான சேவை

இந்தியா - இலங்கை இடையேயான விமான சேவை இன்று தொடங்கியது. முதல் விமானம் சென்னை - யாழ்ப்பாணத்துக்கு இயக்கப்பட்டுள்ளது.

PTI

இந்தியா - இலங்கை இடையேயான விமான சேவை இன்று தொடங்கியது. முதல் விமானம் சென்னை - யாழ்ப்பாணத்துக்கு இயக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவைதொடங்கப்பட்டுள்ளது. சுமாா் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விமான சேவை தொடங்கியுள்ளது. கரோனா பரவல் காரணமாக, இந்தியாவிலிருந்து விமான சேவையை இலங்கை ரத்து செய்திருந்தது.

இன்று காலை அலையன்ஸ் ஏர் சர்வீஸ் நிறுவனத்தின் முதல் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டு, 11.25 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் கொண்ட 14 பயணிகள் மட்டுமே இந்த விமானத்தில் இருந்தனர். யாழ்ப்பாணம் விமான நிலையத்தில், வந்து தரையிறங்கிய  விமானத்தை வரவேற்கும் விதமாக எளிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கிருந்து மீண்டும் 2.50 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்னை வருகிறது. இதுபோல வாரத்தில் நான்கு நாள்களுக்கு இரண்டு வழித்தடங்களிலும் விமானங்கள் இயக்கப்படவிருக்கின்றன.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளும் முயற்சியில் உள்ள இலங்கைக்கு, இந்த விமான சேவை மூலம் சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை இலங்கைக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் பிரிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, இலங்கையில் சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியது. இதனால் பல்வேறு விமான சேவைகளை அந்நாட்டு அரசு நிறுத்தியது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைய கரோனா பரவலும் ஒரு காரணமாகும்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் சுற்றுலாத் துறை சற்று மேம்பட்டுள்ளது. இதையடுத்து விமான சேவைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

SCROLL FOR NEXT