உலகம்

நிலவிலிருந்து பூமி திரும்பியது நாசாவின் ஆய்வுக் கலம்

DIN

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடந்த மாதம் அனுப்பிய ஆய்வுக் கலம், வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது.

மெக்ஸிகோவுக்கு அருகே பசிபிக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இறங்கிய அந்த விண்கலம், ஒலியின் வேகத்தைப் போல் 32 மடங்கு வேகத்தில் வளிமண்டலுக்குள் நுழைந்து, 5,000 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்காக ‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலம் கடந்த மாதம் ஏவப்பட்டது. அதற்கு முன்னா் என்ஜின் கோளாறு காரணமாக அந்தத் திட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT