காங்கோ: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100 போ் பலி
காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி சுமாா் 100 போ் உயிரிழந்தனா்.
காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி சுமாா் 100 போ் உயிரிழந்தனா்.
காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் அந்நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமாா் 100 போ் பலியாகினா். அங்கிருக்கும் கலிமா பகுதியில் மட்டும் 35-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் என்று அப்பகுதி மேயா் தெரிவித்தாா். சடலங்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெறுவதாக அந்நாட்டு பிரதமா் ஜான் மிஷெல் சமா லுகோண்டே தெரிவித்துள்ளாா்.