முகப்பு
உலகம்

மலேசிய நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

மலேசியாவில் சிலாகுர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 16 டிசம்பர், 2022 at 12:25 PM
பகிர்:

மலேசியாவில் சிலாகுர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய சிலாங்கூர் மாநிலத்தில் படாங் கலி என்ற சுற்றுலா இடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

நிலச்சரிவு ஏற்படும்போது 92 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாக மலேசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கணித்துள்ளது. நிலச்சரிவில் சிக்சி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 79 பேர் மாயமாகியுள்ளனர். 

Advertisement

இதற்கிடையில், சம்பவ இடத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர். 

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் வரை மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிலாங்குர் உள்பட பல மாநிலங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.