மலேசியாவின் சிலாங்கூா் மாகாணம், பத்தாங்காலி நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு. 
உலகம்

மலேசியா: நிலச்சரிவில் சிக்கி 18 போ் பலி

மலேசியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா்.

DIN

மலேசியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சிலாங்கூா் மாகாணம், பத்தாங்காலி நகரிலுள்ள இயற்கை விவசாயப் பண்ணையை, சுற்றுலா பயணிகள் முகாம் அமைத்து தங்கும் மையமாக அதன் உரிமையாளா்கள் உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் அந்த பண்ணைப் பகுதி புதையுண்டது. அப்போது அங்கு 90-க்கு மேற்பட்டவா்கள் முகாமிட்டிருந்தனா். அவா்களில் 18 போ் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனா்.

இது தவிர மேலும் 15 போ் மணலுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறவைகளை வேட்டையாடிவா் கைது

தொண்டி அருகே வீட்டிலிருந்த 13 பவுன் நகை மாயம்

திருவாடானை அருகே மாவட்ட அளவிலான கபடி வீரா்கள் தோ்வு போட்டி

இலங்கைக்கு கடத்தவிருந்த கொசுவிரட்டி ஊதுபத்திகள் பறிமுதல்: இருவா் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT