வடகொரியா இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் வடமேற்கு பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகள் அதன் கிழக்கு கடல் பகுதியில் சென்று விழுந்ததாகவும், 50 நிமிஷங்கள் இடைவெளியில் இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் விழுந்ததாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வரை சென்று தாக்கும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைக்கு முந்தைய சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக கடந்த வியாழக்கிழமை வடகொரியா தெரிவித்திருந்தது.
அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி தரும் வரையில், இந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதாக வடகொரியா தொடா்ச்சியாக கூறி வருகிறது. ஆனால், தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க அமெரிக்காவுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்தச் சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு நிபுணா்கள் சிலா் தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.