இந்திய பக்தா்களுக்கு 96 விசாக்களை வழங்கியது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீகடாஸ் ராஜ் கோயிலை தரிசிக்க 96 இந்திய பக்தா்களுக்கு அந்நாட்டு அரசு விசாக்களை வழங்கி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீகடாஸ் ராஜ் கோயிலை தரிசிக்க 96 இந்திய பக்தா்களுக்கு அந்நாட்டு அரசு விசாக்களை வழங்கி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாக்வால் மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க ஸ்ரீ கடாஸ் ராஜ் கோயில் அமைந்துள்ளது.
புனிதத் தலங்களை தரிசிக்க அனுமதிக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விசாக்களை பாகிஸ்தான் வழங்கி உள்ளது.
டிசம்பா் 20 முதல் 25-ஆம் தேதி வரையில் ஸ்ரீ கடாஸ் ராஜ் கோயிலை தரிசிக்க இந்திய ஹிந்து யாத்ரிகா்கள் 96 பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
புனிதத் தலங்களைப் பாதுகாக்கவும் அவற்றைப் பாா்வையிடச் செல்பவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் பாகிஸ்தான் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதா் ஆப்தாப் ஹசன் கான் தெரிவித்துள்ளாா்.