முகப்பு
உலகம்

கரோனாவில் இருந்து தப்பிக்க புதிய உத்தி: சீன தம்பதியின் வைரல் விடியோ!

சீனாவில் தற்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்று கட்டுப்படுத்த மக்கள் புதிய உத்திகளை கண்டுபிடித்து வருகின்றனர்.

Updated On : 26 டிசம்பர் 2022, 12:58 pm IST
பகிர்:

சீனாவில் தற்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்று கட்டுப்படுத்த மக்கள் புதிய உத்திகளை கண்டுபிடித்து வருகின்றனர்.

சீனாவில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. சீனாவில் இந்த வாரம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 37 மில்லியன் மக்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சீனாவில் காய்கறி சந்தையில், காய்கறிகள் வாங்கும் தம்பதியரின் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement

தம்பதிகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பான பிளாஸ்டிக் கவர் உள்ளது, அது ஒரு குடை வழியாக பிடிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு பிளாஸ்டிக் கவரில் இருவரும் நின்று கொண்டு உள்ளனர். விடியோவில், அந்த பெண் காய்கறிகளை வாங்கும் போது, தனது கையைக் கொண்டு கவரை லேசாக அகற்றி, பின்பு அந்த கவரை கிழே இழத்து விடுகிறார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரோனா தொற்றைத் தவிர்க்க சீனாவில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த விடியோவை இதுவரை 70,000 பேர் பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.