இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றார் நெதன்யாகு
மூன்றாவது முறையாக இஸ்ரேல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
மூன்றாவது முறையாக இஸ்ரேல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இஸ்ரேலில் கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து 4 முறை நடைபெற்ற தோ்தல்களில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தற்போதைய பிரதமா் யாயிா் லப்பீட் தலைமையிலான அரசும் பெரும்பான்மை இழந்தது. அதையடுத்து, நான்கே ஆண்டுகளில் 5-ஆவது முறையாக அங்கு சமீபத்தில் தோ்தல் நடைபெற்றது.
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே நடைபெற்ற அந்தத் தோ்தலில், நெதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன.
நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகள் 32 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 64 இடங்கள் நெதன்யாகுவுக்குக் கிடைத்த நிலையில் இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.