உலகம்

ஐந்து மாதங்களில் முதல்முறையாக மக்கள் முன் தோன்றிய வட கொரிய அதிபரின் மனைவி

DIN

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக வட கொரிய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் அந்நாட்டு அதிபரின் மனைவி ரி சோல் ஜூ தோன்றியுள்ளார். கரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்தே அதிபரின் குடும்பத்தினர் பொது நிகழ்ச்சிகளிலும் மக்கள் முன் தோன்றுவதையும் தவிர்த்துவருகின்றனர்.

இந்நிலையில், சந்திர புத்தாண்டை முன்னிட்டு வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் மன்சுடே கலையரங்கத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கிம்மும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். 

நாடு நிறுவப்பட்ட ஆண்டு விழாவில், கிம்மின் மறைந்த தாத்தா மற்றும் தந்தையின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அரண்மனைக்கு தனது கணவருடன் ரி சோல் ஜூம் சென்றிருந்தார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த பொது நிகழ்ச்சியில்தான் அவர் கடைசியாக கலந்து கொண்டார்.

இதுகுறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், "வரவேற்பு இசை இசைக்க, (கிம்) அவரது மனைவி ரி சோல் ஜூவுடன் திரையரங்கில் தோன்றினார். அங்கிருந்த ​​பார்வையாளர்கள் அவரை கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு, மேடை ஏறி்ய இருவரும், கலைஞர்களுடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்து கொண்டனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பல நேரங்களில், சமூக, வணிக மற்றும் இராணுவ பயணங்களின்போது கிம் தனது மனைவி ஜூயை அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு நேர் மாறாக, கிம் உன்னின் தந்தை தனது மனைவிகளுடன் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு கச்சேரியில் கலந்து கொள்வதற்கு முன்பு அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக அரசு ஊடகங்களில் தோன்றாமல் இருந்தார். அப்போது, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT