உலகம்

பாகிஸ்தானில் 2 ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 15 பயங்கரவாதிகள், 4 வீரர்கள் பலி

பாகிஸ்தானில் 2 ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

DIN

பாகிஸ்தானில் 2 ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இரண்டு ராணுவ முகாம்கள் மீது பங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களில் 4 ராணவ வீரர்கள் பலியானார்கள். 15 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். 

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் கூறுகையில், புதன்கிழமை மாலை பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இரண்டு ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். ஒரு முகாம் நௌஷ்கி நகருக்கு அருகிலும் மற்றொன்று பஞ்ச்கூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.

இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகவும், நௌஷ்கியில் ஒன்பது பயங்கரவாதிகளையும், பஞ்ச்கூரில் மேலும் ஆறு பயங்கரவாதிகளையும் ராணுவத்தினர் கொன்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

SCROLL FOR NEXT