தெற்கு சோமாலியாவில் மினி வேன் மீது கண்ணிவெடி தாக்கப்பட்டதில் 5 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு சோமாலியாவில், ஜூபாலஷ்ட் மாநிலத்தில் உள்ள ராணுவ தளபதி டிகோவ் அப்டினூர் ஏடன், பயணிகள் பேருந்து தெற்கு துறைமுக நகரமான கிஸ்மாயோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கண்ணிவெடியால் தாக்கப்பட்டதாகக் கூறினார்.
தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிஸ்மாயோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்ணிவெடி வெடித்த நேரத்தில் ஜூபாலண்ட் மாநிலப் படைகள் அல்-ஷபாப் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டதாக ஏடன் கூறினார்,
மேலும், கிஸ்மாயோவின் வடக்கில் நடந்த நடவடிக்கையின் போது இரண்டு வீரர்கள் காயம் அடைந்ததாகத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.