முகப்பு
உலகம்

நான்காவது டோஸ் தேவைப்படலாம்: வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் தகவல்

மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் அடுத்தடுத்த டோஸ்கள் தேவைப்படுகிறதே என கேள்வி எழுப்பிதற்கு இதுகுறித்து உன்னிப்பாக கவனித்துவருகிறோம் என மருத்துவர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி
பகிர்:

அமெரிக்காவில் ஒமைக்ரான் கரோனா வகையை எதிர்த்து போராடுவதற்கு நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் என வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி இன்று தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபரின் அடிப்படை மருத்துவ நிலையை பொறுத்தும் அவரது வயதை பொறுத்தும் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், "மீண்டும் மற்றொரு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். குறிப்பாக, எம்ஆர்என்ஏ தடுப்பூசியை செலுத்தி கொள்வோருக்கு நான்காவது டோஸ் தேவைப்படலாம். அவரது வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து செலுத்தப்படும்" என்றார்.

மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் அடுத்தடுத்த டோஸ்கள் தேவைப்படுகிறது என தரவுகள் கூறுகின்றது என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இதுகுறித்து உன்னிப்பாக கவனித்துவருகிறோம் என மருத்துவர் அந்தோனி ஃபாசி பதில் அளித்தார்.

"கரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு நவம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் உள்ள அரை மில்லியன் மக்கள் கரோனாவால் இறந்துள்ளனர், இது கரோனா வைரஸ் நெருக்கடியின் முதர்ச்சியான கட்டம்" என்றும் ஃபாசி முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஒமைக்ரானை 'கவலையளிக்கும் மாறுபாடு' என்று பட்டியிலிட்டதிலிருந்து சுமார் 1,00,000 இறப்புகள் அமெரிக்காவில் நிகழ்ந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் விவரித்த ஃபாசி, "ஆறு மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைகள் மற்றும் 21 மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் நிறுவனம் தடுப்பூசி செலுத்தி பரிசோதித்ததுள்ளது" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →