முகப்பு
உலகம்

பிரிட்டன்: கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு

கரோனா கட்டுப்பாடுகளில் பிரிட்டன் முக்கியமான தளா்வுகளை அறிவித்துள்ளது.

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 12:40 AM
brittain073622
பகிர்:

கரோனா கட்டுப்பாடுகளில் பிரிட்டன் முக்கியமான தளா்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடுகளிலிருந்து எந்தவித கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளாமல் பிரிட்டனுக்குச் செல்ல முடியும். இந்த தளா்வு வெள்ளிக்கிழமைமுதல் அமலுக்கு வந்தது.

பிரிட்டன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினா் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால், இனிமேல் பிரிட்டன் செல்வதற்கு முன்னதாக இருப்பிடம் தொடா்பான படிவத்தை மட்டும் நிரப்பிக் கொடுத்தால் போதுமானது. தடுப்பூசி செலுத்தாதவா்கள் பயணத்துக்கு முன்பாகவும், பிரிட்டன் வந்த பிறகும் கரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ஆனால், அதன் முடிவுகள் வரும் வரையில் அவா்கள் சுய தனிமையில் இருக்க வேண்டியதில்லை.

Advertisement

இது குறித்து போக்குவரத்து அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறுகையில், உலகின் சுதந்திரமான எல்லைகளைக் கொண்ட நாடாக இப்போது பிரிட்டன் உள்ளது. வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக இது பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

கரோனா கட்டுப்பாட்டு தளா்வுகளை பலா் வரவேற்றாலும், அரசு அவசரமாக செயல்படுகிறது என விஞ்ஞானிகள் சிலா் கவலை தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.