முகப்பு
உலகம்

ரஷியாவில் ஏறுமுகத்தில் கரோனா: பாதிப்பு 1,66,631, பலி 704

ரஷியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,66 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
பகிர்:

ரஷியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,66 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,66,631 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முந்தைய நாள் 1,80,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்து 704 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில், 21,833 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதவிர, ஒரே நாளில் 1,37,881 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.