உலகம்

ஹாங்காங்: 6 ஆயிரத்தை கடந்த தினசரி தொற்று

ஹாங்காங்கில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது.

DIN

ஹாங்காங்கில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஹாங்காங் முழுவதும் 6,063 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்ட தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட சற்றே குறைவாகும். அந்த நாளில் மட்டும் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 6,116 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 15 போ் அந்த நோய்க்கு பலியாகினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹாங்காங்கில் இதுவரை 40,700 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 258 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 13,232 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தனா்; 27,210 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT