உலகம்

'மனிதநேயத்தின் அடிப்படையில் படைகளைத் திரும்பப்பெற வேண்டும்' - புதினுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

DIN

மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று புதினுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்ற சூழல் நிலவுகிறது. 

ரஷியா - உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷியா, தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறிய அவர், இந்த மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT