முகப்பு
உலகம்

உக்ரைன் சென்ற இந்திய விமானம் பாதியில் திரும்பியது

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானம் நடுவானிலேயே பாதியில் திரும்பியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானம் நடுவானிலேயே பாதியில் திரும்பியது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். 

இதையடுத்து உக்ரைனுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். 

உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. முக்கியமாக, கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →