கோப்புப்படம் 
உலகம்

உக்ரைன் போர்: தில்லியில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு: உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. மேலும் இந்தியர்களுக்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

DIN

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. மேலும் இந்தியர்களுக்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்திய மக்கள் தொடர்புகொள்ள +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905, 1800118797 (இலவச எண்) ஆகிய உதவி எண்களும் situationroom@mea.Gov.In. என்ற இ-மெயில் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்ள +380 997300428 +380 997300483 என்ற எண்களையும் cons1.Kyiv@mea.Gov.In. என்ற இ-மெயில் முகவரியும் தரப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT