உலகம்

உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக போராட்டம்...ரஷியாவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

DIN

நிலம், வான், கடல் என அனைத்து வழியாகவும் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனிலிருந்து வரும் மிரட்டல்களுக்கு பதிலடியாக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். ரஷியாவின் ராணுவ நடவடிக்கையில் மற்ற நாடுகள் தலையிட்டால் இதுவரை பார்த்திராத பின்வுளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. இஸ்ரேல் டெல் அவிவில் அமைந்துள்ள ரஷிய தூதரகத்திற்கு வெளியே மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். அதேபோல, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிராண்டன்பர்க் கேட் முன்பு குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

லெபனான் பெய்ரூட்டில் அமைந்துள்ள ரஷிய தூதரகத்திலும் மக்கள் போராட்டம் நடத்தினர். நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில், உக்ரைன் மீது நடத்தப்படும் வரும் ஏவுகணை மற்றும் துருப்புத் தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்கள் உக்ரேனியக் கொடியை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT